Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி-தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்!

10:58 AM Oct 30, 2023 IST | Student Reporter
Advertisement

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசினை வென்றது.

Advertisement

மயிலாடுதுறை மாவட்ட  திமுக  விளையாட்டு  மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 27-ம்
தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

நாக்அவுட்  முறையில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40
அணிகள் பங்கேற்றன.  நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்:விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்தி

இதில்,  தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம்
பரிசை வென்றது.  சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம்
இடம் பிடித்து ரூ 70,000ஆயிரம் பரிசினையும்,  வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ஆயிரம்  பரிசினையும்,  திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ஆயிரம் பரிசை பெற்றன.

மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000  பரிசு வழங்கப்பட்டது.  பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

Tags :
In Kuttalamkabaddi tournamentMayiladuthuraistate levelTamil Nadu Police TeamWins
Advertisement
Next Article