Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 94.56% பேர் தேர்ச்சி!

09:57 AM May 06, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியானது.

Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.  மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

இதையும் படியுங்கள் :  மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொது தேர்வெழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,52,165.  அதில் தேர்ச்சி பெற்றொரின் எண்ணிக்கை 3,25,305.  பிளஸ் 2 பொது தேர்வெழுதிய மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 4,08,440 அதில் தேர்ச்சி பெற்றொரின் எண்ணிக்கை 3,93,890.  மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் பிளஸ் 2 பொது தேர்வெழுதி தேர்ச்சி பெற்றது குறிப்பிட்டதக்கது. மேலும் 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags :
12thExamresultTamilNaduTNResult
Advertisement
Next Article