பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!
பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. பள்ளி மற்று கல்லூரி தேர்ச்சி விகிதங்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். சுய முன்னேற்றம், கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முக்கிய திட்டங்களை இயற்றி வருகிறது.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையவும் தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தித் திறன் ஆகிய இரண்டிலும் பெண்கள் அதிகளவில் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய தொழிற்சாலைகளில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர். இதன் மூலம் பெண்களின் சதவீதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தேசிய அளவில் கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 23% முதல் 25% வரைதான் உள்ளது.
பெண்களின் வளர்ச்சி :
- தேசிய அளவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42%பேர் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.
- தமிழ்நாட்டில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் கம்பெனிக்களில் 4,400ல் இணை நிறுவனராக குறைந்தபட்சம் ஒரே ஒரு பெண்ணாவது உள்ளனர்.
- தமிழ்நாடு அரசின் முயற்சியால் நடப்பு ஆண்டில் 5500 பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- 200 பெண்கள் கிராமப்புற தொழில்முனைவோராக வழிகாட்டி வருகின்றனர்
- பெண்களால் நடத்தப்படுகிற 51ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு TNSEED நிதியுதவி வழங்கி வருகிறது.
- பெண்கள் மட்டுமே செயல்படும் 5 தொழில் பூங்காக்களை TANSIDCO உருவாக்கியுள்ளது