தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15 வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதி நாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.