For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!

01:04 PM Jan 07, 2024 IST | Web Editor
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு   அமைச்சர் டி ஆர் பி ராஜா பேச்சு
Advertisement

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அப்போது அவர் பேசியதாவது:

“தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆட்டோமொபைல், டயர் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் உழைக்கும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதலமைச்சரின் இலக்கு.”

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement