“தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்!” | #SaintGobainCEO சந்தானம் கருத்து
முதலீடு செய்ய தமிழ்நாட்டைப் போல் சிறந்த இடம் இல்லை என செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்துறை சார்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், ரூ. 51 ஆயிரம் கோடிக்கான 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மொத்தமாக 68, 873 கோடி மதிப்புக்கு மேல் திட்டங்கள் தொடங்கப்பட்டதால் , சுமார் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் பேசிய செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்ததாவது:
- தொழில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாட்டைப் போல் சிறந்த இடம் இல்லை என தெரிவித்தார். அதற்கு முக்கிய காரணங்களாக , தமிழ்நாட்டின் மக்கள், மனித வளம் முக்கிய காரணமாகும், இங்குள்ள மக்கள் கல்வியறிவில் சிறந்தவர்களாக உள்ளனர். பணிகளில் இவர்களது அர்ப்பணிப்பானது சிறப்பாக உள்ளது.
- இங்கு உற்பத்தி திறனுக்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
- தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது
- முதலீட்டாளர்களை, தங்களது கூட்டாளிகளை பார்க்கும் மனநிலை இருக்கிறது.
- நிலைத்த வளர்ச்சியை முன்னெடுக்க விரும்புவோருக்கு, தமிழ்நாடு சிறந்த மாநிலம். இங்கு 50 சதவிகித மின்சார ஆற்றல் பசுமை ஆற்றலாக உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் தொழில் செயல்படும் விதமும் லாபகரமாக உள்ளது. ஆகையால், முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள், என்னை போல தொடர்ந்து முதலீடு செய்யுங்கள் என செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார்.