For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!” - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

12:35 PM Jan 07, 2024 IST | Web Editor
“பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ”   உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று ( 07.01.2024) உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் தொடங்­கியது. இந்த நிகழ்வில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.  இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன.

உலக முத­லீட்­டாளர் மாநாட்­டின் தொடக்க விழாவை பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டிருந்தது.  இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்தார். பின்னர் இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இதனை தொடர்ந்து உரை­யாற்­றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது, அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட 9 நாடுகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. நாளைய தொழிற் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து சமூக , பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்நிறுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழக அரசு மதிக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Tags :
Advertisement