"இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
10:46 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதாக சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Advertisement
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை மற்றும் கோவையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
அமெரிக்காவிற்கு நான் வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நான். 75 ஆண்டுகள் பழமையான அரசியல் இயக்கமான திமுகவின் தலைவர் நான். இப்போது தமிழ்நாட்டை 6வது முறையாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். இந்திய நாட்டில் பல முறை எங்களது கூட்டணி பிரதமர்களை உருவாக்கி ஆட்சி அமைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : ” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1971ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது அமெரிக்காவிற்கு வருகை தந்தார். இப்போது நான் வந்துள்ளேன். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 48% நகரமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டதட்ட 20 % தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தில் 48% கொண்ட மாநிலம் தமிழ்நாடு"
இவ்வாறு சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.