"விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலம் தமிழகம்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!
சென்னை செம்மஞ்சேரியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் இணைந்து நடந்தும் 68வது தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகல் நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி துவக்கி வைத்தார். இந்த போட்டி இன்று முதல் வரும் 19ம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
முன்னதாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 33 அணிகளை சேர்ந்தவர்கள் நடத்திய அடையாள அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் அன்பிலுமகேஷ் பொய்யாமொழி ஏற்றுக் கொண்டார். மேலும் இந்த போட்டியில் மொத்தம் 396 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதை தொடர்ந்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள மாணவியர், பயிற்சியாளர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். பத்திரிகையில் சுட்டிக்காட்டுவதை திருத்தி கொள்ளும் அரசாக தமிழக அரசு உள்ளது. பூசி மொழுகி கொள்ளும் அரசாக இல்லை. செஸ் ஒலிம்பியாட், ஹாக்கி, பார்முலா 4 ரேஸ் போன்ற விளையாட்டில், முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.
தமிழகத்தில் இருந்து, 1021 மாணவ, மாணவியர் இந்தியா அளவிலும், உலக அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 27 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு, 12.50 கோடி ரூபாய் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது" என்று தெரிவித்தார்.