For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு - ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு!

02:48 PM Jan 07, 2024 IST | Web Editor
தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு   ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக தெரிவித்தார்.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­றினார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டுக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், காணொலி மூலம் உரையாற்றிய முகேஷ் அம்பானி,

“தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாட்டிலேயே வணிகத்திற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எனவே, அது விரைவில் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.ரிலையன்ஸ் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெருமிதத்துடன் பங்கு பெற்றுள்ளது. ரூ.25,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,300 சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்துள்ளோம். தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடிக்கு மேல் ஜியோ முதலீடு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நகரம், கிராமத்தில் 35 மில்லியன் சந்தாதாரர்களிடம் டிஜிட்டல் புரட்சியின் மூலம் அதன் பலன்களை ஜியோ கொண்டு சேர்த்துள்ளது.

கனடாவின் புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் ரியாலிட்டியுடன் இணைந்து ரிலையன்ஸ் ஒரு அதிநவீன தரவு மையத்தை அமைக்க உள்ளது. அது அடுத்த வாரம் திறக்கப்படும். தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ரிலையன்ஸ் உறுதி பூண்டுள்ளது. காலநிலை நெருக்கடியில் இருந்து தாய் பூமியை காப்பாற்ற தேவையான நிலையான வளர்ச்சியை மேம்படுத்த மாநில அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்.” இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Tags :
Advertisement