தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் ”மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் எனும் தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரச்சாரம் மேர்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
”திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரசு பொது மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சை கிடைக்கவில்லை. திமுக அரசின் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல நகராட்சி பேரூராட்சி போன்ற பகுதியில் இருந்த வீட்டு வரி 1000 கட்டணம் தற்போது 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் மேயர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், திருநெல்வேலி மேயர்களுக்கும், கவுன்சிலருக்கும் சண்டை இருந்து வருகிறது. திமுகவினர் நடத்தும் மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டிருந்தால் மீண்டும் வேறு மருத்துவமனை சென்று நல்ல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அமோகமாக இருக்கிறது. மேலும் சாக்லேட், ஆம்லெட் போன்றவற்றில் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. இளைஞர்கள் பொதுமக்கள் போன்றவர்கள் போதைக்கு அடிமையாகி சென்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய எங்களால் முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கைவிரித்துவிட்டார். ராசிபுரம் பகுதி தாழ்த்தப்பட்டோர் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அவர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்த உடன் விடு இல்லாத மக்களுக்கு சிறந்த முறையில் கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். திமுக அரசு அமைந்த உடன் மாணவருக்கு வழங்கப்படும் லேப்டாப் நிறுத்தப்பட்டது. அதிமுக அரசு அமைந்த உடன் லேப்டாப் வழங்கப்படும்”
என்றார்.