Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”தமிழ்நாடு கலவர பூமியாகிவிட்டது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு கலவர பூமியாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
06:58 PM Jul 31, 2025 IST | Web Editor
ராமநாதபுரத்தில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழ் நாடு கலவர பூமியாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
Advertisement

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ”மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று ராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மாவட்டங்களில் மக்களை சந்தித்தார். முதலில் ராமநாதபுரம் தொகுதியில் மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியது,

Advertisement

” திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு 50 மாதம் ஆகிறது. ய்ஜிமுகவின் தேரிதல் வாக்குறுதியில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனாலும் விலை உயர்கிறது.

திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மன், மற்றவர்கள் இயக்குனர்கள். ஸ்டாலினை அடுத்து உதயநிதியை கொண்டுவர முயல்கிறார்கள்,  அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம் ஆனால் திமுகவில் அந்த குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். இந்த குடும்ப ஆட்சிக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

ராமநதபுரம் வறட்சி மாவட்டம். இந்தப் பகுதியிலும் கண்மாய் நிரம்புவதற்காக காவிரி - குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம்.14,400 கோடி ரூபாய் நிதியில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால்  திமுக அரசு இதனை கைவிட்டது. அடுத்து அதிமுக ஆட்சி அமைத்ததும் மீண்டும் காவிரி - குண்டாறு திட்டம் தொடங்கப்படும்.

.திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை ஆனால் இப்போது தமிழ் நாடு கலவர பூமியாகிவிட்டது.

அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக  அப்தல் கலாமை எதிர்த்து ஓட்டுப்போட்டனர். இதிலிருந்து யார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்”

என்று பேசினார்.

Tags :
ADMKamnadhapuramDMKEPSlatestNewsstalinTNnews
Advertisement
Next Article