Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 68,321 வாக்கு சாவடி மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்" - சத்யபிரதா சாகு பேட்டி!

09:11 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன அவற்றில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நாளை தொடங்கி ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி - மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்!

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது :

"தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. மேலும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியாக உள்ளது. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467 ஆக உள்ளது.

இதையடுத்து, முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆக உள்ளது. 80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6,14,002 ஆக உள்ளது. மேலும், 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை  950 ஆக உள்ளது.  அதில், ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 874 ஆக உள்ளது. மேலும், பெண் வேட்பாளர்கள் 76ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நாளை  மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளிலும், மணிப்பூரில் 2 தொகுதிகளிலும், மேகாலயா 2 தொகுதிகளிலும்,  மிசோரம் 1 தொகுதியிலும், நாகாலாந்து 1 தொகுதியிலும்,  ராஜஸ்தான் 12 தொகுதிகளிலும், சிக்கிம் 1 தொகுதியிலும், தொகுதிகளிலும்,  திரிபுரா 1 தொகுதியிலும், உத்தரப் பிரதேசம் 8 தொகுதிகளிலும், உத்தரகாண்ட் 5 தொகுதிகளிலும்,  மேற்கு வங்கம் 3 தொகுதிகளிலும், அந்தமான நிக்கோபர் தீவுகள் 1 தொகுதியிலும்,  லட்சத்தீவு 1 தொகுதியிலும்,  ஜம்மு காஷ்மீர் 1 தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது"

இவ்வாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Tags :
Election2024ElectionCommissionElectionswithNews7tamilSatyapratha SahuTamil Nadu Chief Electoral OfficerTamilNaduTNElection
Advertisement
Next Article