For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் - மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

01:36 PM Dec 19, 2023 IST | Web Editor
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்   மீட்க உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
Advertisement

தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களை  மீட்க உதவுமாறு, நியூஸ் 7 தமிழ் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடக்கம்!

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளம் பாதித்த  பகுதிகளில் பல குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.  மீட்பு படையினர் தொடர்பு கொள்ள முடியாத பல பகுதிகள் தனித் தீவாக துண்டித்து காணப்படுகிறது.  பலர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தங்களை மீட்க உதவுமாறு கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

Imageபாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை : 

  • தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க கோரிக்கை; இணைய சேவை ரத்தானதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் - தொடர்புக்கு : +91 97863 43481
  • தூத்துக்குடி M.சவேரியார்புரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி; உடனடியாக மீட்க கோரிக்கை - தொடர்புக்கு : +91 81224 25164
  • தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் திருக்கலூர் கிராமம் மணல் குண்டு செல்வராஜ் நகர் பகுதியில் 16 பெரியவர்களும் ஐந்து சிறுவர்களும் சிக்கிக் கொண்டுள்ளனர் அவர்களை மீட்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்
  • தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அடுத்த திருக்கலூர் கிராமம், மணல் குண்டு செல்வராஜ் நகர் பகுதியில் 16 பெரியவர்களும், 5 சிறுவர்களும் சிக்கித் தவிப்பு; உடனடியாக மீட்க பொதுமக்கள் கோரிக்கை
    Image
  • ஆழ்வார்திருநகரி அருகே சிவராமங்கம் என்ற கிராமம் தண்ணீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் தத்தளித்து வருகின்றனர் தொடர்புக்கு - 9360980784
  • தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் உள்ள கிரசண்ட் பள்ளி வளாகத்தில் வெள்ளம் காரணமாக இரண்டு குடும்பங்கள் தவித்து வருகின்றனர்; உடனடியாக மீட்க கோரிக்கை- தொடர்புக்கு : 9976961212
  • தூத்துக்குடி மாவட்டம் ,அண்ணாநகர் ,நாலாவது தெரு ஆசாரி சந்தன மாரியம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் பரமேஸ்வரி என்கிற கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு நாட்களாக எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. உடனடியாக மீட்க கோரிக்கை அவரது தொடர்பு எண் : 6381411822
    Image
  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, வரதராஜபுரத்தை அடுத்த நல்லான்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன. தங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் சுற்றுவட்டார கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்; 30 மணி நேரத்திற்கும் மேலாக உணவின்றி தவித்து வரும் மக்கள்; 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கித் தவிப்பு; உடனடியாக மீட்க கோரிக்கை தொடர்புக்கு : 87605 36116
  • தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகர், சம்ரியாஸ் நகர், நேரு காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி தவிப்பு; உதவும்படி கோரிக்கை
Tags :
Advertisement