For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!

07:22 PM Jan 12, 2024 IST | Web Editor
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு
Advertisement

2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, உள்ளிட்ட ஏழு விருதுகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சிறந்த படைப்புகளைக் கொண்டு, தமிழுக்கும், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் தொண்டர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து வருகிறது.

அந்த வகையில்,  பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூ.3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும்  பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2023ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

இதையும் படியுங்கள் : “வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டராக பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்திற்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை வழங்குகிறது.

தேசிய தமிழ் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி-ஐ கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ.பலராமனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92ஆவது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ் பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும்,  இந்த விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Tags :
Advertisement