For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
10:05 AM Jan 06, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
Advertisement

தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியானது துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற மற்றும் பொது மக்கள் விண்ணப்பம் அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.

விண்ணப்பம் அளிக்க ஆன்லைன் மூலமாகவும், ஓட்டு சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 1,44,000 மனுக்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வந்தன.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியளில் சேர்த்தும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கியும் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி காவல் ஆணையர் மற்றும் மற்ற மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர்.

Tags :
Advertisement