Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!" - சீமான் பேச்சு!

07:04 PM Apr 11, 2024 IST | Web Editor
Advertisement

40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயம்தான் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா.கனிமொழியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள் : தென்காசியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி திடீர் ரத்து!

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"வாகனம் வாங்கும் போதே சாலை வரி கட்டி வாங்கப்பட்ட பின்னர், எதற்கு சுங்கசாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு என்ன முன்னேற்றம் கண்டது. இந்த கட்சிகள் எதுவும் தமிழ்நாட்டிற்கு முன்னேற்றத்தை தரவில்லை. எனவே, நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள்.

நாட்டில் தெருவுக்கு இரண்டு குடிப்பகம் இருக்கிறது. ஆனால், ஒரு படிப்பகம் கூட இல்லை.
ஒவ்வொருவரும் காசு வாங்கி வாக்களிக்க மாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் 10 ஆண்டுகள் பாஜக ஆண்டது எதுவும் சரியில்லை. நீட் தேர்வை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்தி வருகிறது.பிகார் மற்றும் அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 1 கட்ட தேர்தல் நடைபெறவதற்க  நாம் தமிழர் கட்சி மீது உள்ள பயம் தான்காரணம். நாதக கட்சி இல்லை என்றால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாகி இருக்க மாட்டர்கள்"

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Tags :
Election2024Elections2024Naam Tamilar PartyparlimentaryelectionSeemantamil nadu
Advertisement
Next Article