For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்”-ஜி.கே.வாசன்!

விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
02:51 PM Aug 27, 2025 IST | Web Editor
விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
”விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்” ஜி கே வாசன்
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.

Advertisement

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"இந்தியாவில் துணை ஜனாதிபதி பதவி என்பது உயர்ந்த மரியாதைக்குரிய பதவியாகும். அத்தகைய பதவிக்கு ஒரு தமிழரான ராதாகிருஷ்ணனை நியமிப்பதை பெருமை கொள்ள வேண்டும். மாறாக அதை திமுகவும் கூட்டணி கட்சிகளும் தவிர்ப்பதும், தடுப்பதும் தமிழருக்கு தமிழரே பெருமை இல்லை. அதிமுக ஆட்சியின் போது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையை  தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். பாபநாசத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு-ராமாநல்லூர் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும். வாழ்க்கை -தூத்தூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர், ”திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தேக்கமடையாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags :
Advertisement