Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மருத்துவப் படிப்பு - மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதே ஒரே தீர்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

10:01 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் நீட் குளறுபடிகளுக்கு ஒரே தீர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

நிகழ்வாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு,  நீட் தேர்வு குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இதையும் படியுங்கள் : இந்திய பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர்களுக்கு அழைப்பு! GNI இந்திய மொழிகள் திட்டம் 2024க்கு ஜூன் 17, 2024 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையைக் காட்டுவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :

''கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது,  திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும். மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.

மத்திய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்தார்.

Tags :
CMOTamilNaduMKStalinNEETNeetExamTamilNaduunion government
Advertisement
Next Article