முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது . இந்த கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் ஆவணப்படுகொலை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் முதலமைச்சர் வரும் 16,17ம் தேதி சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.