For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
11:34 AM Feb 10, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
Advertisement

தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

Advertisement

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜன.8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற்​றது. அந்த விவாதத்​துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் 11ம் தேதி பதிலளித்​தார். மொத்தம் 6 மசோதாக்​களும் நிறைவேற்றப்​பட்டன. தேதி குறிப்​பிடா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​படு​வதாக பேரவைத் தலை​வர் அப்​பாவு அறி​வித்​தார்​. தொடர்ந்து, இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement