தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் : சென்னை முழுவதும் நேரடி ஒளிபரப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை மறுநாள் (மார்.14) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலை சென்னையின் 100 இடங்களில் காணொலி காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும், 15,03,2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இடி திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 2025-26 நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.