தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 - உலக நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி !
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொமியை உலகெங்கிலும் விரிவடைய செய்ய பல திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் சிலவற்றை இங்கு காணாலாம்.
1. 45 பன்னாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட உள்ளது. இதற்காக ரூ.133 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. தமிழின் தலைசிறந்த 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
3. ஓலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்திய மற்றும் வெளிநாடு நகரங்களில் இந்தாண்டு முதல் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளம் தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில் தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு வகுப்புகள். அயலக தமிழர் நல வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த நேரடி வகுப்புகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி கணினி தேர்வு முறையில் ஆண்டுதோறும் நடத்தப்படும். வெற்றியாளர் மட்டுமின்றி சிறந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1 கோடி வழங்கி சிறப்பிக்கப்படும்.
7. தமிழின் தொடர்ச்சியை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘அகரம்’ மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
8. எதிர்வரும் 2025-26ஆம் ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டின் கீழடி, பட்டனமருதூர், நாகப்பட்டினம், ஆதிச்சனூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும். அண்டை மாநில பகுதிகளிலும் தமிழின் தொன்மையை தேடும் பணி விரிவடைந்துள்ளது.