Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! | கோவையில் அண்ணாமலை... நீலகிரியில் எல்.முருகன் போட்டி!

06:36 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவையில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு.

தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்

கோவை : அண்ணாமலை

கன்னியாகுமரி: பொன். ராதாகிருஷ்ணன்

நெல்லை : நயினார் நாகேந்திரன்

வேலூர் : ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)

மத்திய சென்னை: வினோத் பி.செல்வம்

நீலகிரி(தனி தொகுதி): எல்.முருகன்

கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன்

பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)

Tags :
BJPElection2024Lok Sabha Elections 2024tamil nadu
Advertisement
Next Article