எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக எதிர்க்கட்சித் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
அதன்படி, நேற்று அது குறித்து பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அதே கோரிக்கையை முன்வைத்தார். அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சர் பரிந்துரைபடி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி துணை தலைவராக இருக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கு, எதிர்கட்சி தலைவர் அருகில் இருகை ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் இருக்கை இரண்டாவது வரிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.