Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதிமுக - தவெக கூட்டணி" | உண்மையில்லை என #TVK விளக்கம்!

12:19 PM Nov 18, 2024 IST | Web Editor
Advertisement

தவெக - அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக விமர்சித்திருந்தார். ஆனால், அதிமுகவை விமர்சிக்காதது குறித்து பிற கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். மேலும், அதிமுக, தவெக கூட்டணி வைக்கப் போவதாகவும் கருத்துகள் பரவின. இந்நிலையில், அதிமுக - தவெக கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தவெக சார்பல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் தவெக தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். தவெக தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் லாரன்ஸ் பிஷ்னோயை சல்மான் கான் சிறையில் சந்தித்ததாரா? – #ViralVideo | உண்மை என்ன?

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழ்நாடு மக்களின் நலனுக்கானது. தவெக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/TVKHQUpdates/status/1858393726420172884?t=m5qaUI1vkMQaJZrTt-sFAg&s=19
Tags :
AIADMKALLIANCENews7Tamilnews7TamilUpdatestamil naduTamilNadutvkTVK Vijay
Advertisement
Next Article