For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TamilNadu | 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - இன்று முதல் அமல்!

07:02 AM Sep 01, 2024 IST | Web Editor
 tamilnadu   25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு   இன்று முதல் அமல்
Advertisement

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது.

Advertisement

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு, 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Tags :
Advertisement