வயநாடு நிலச்சரிவு : ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகைகள்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக தமிழ் நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி உள்ளிட்டோர் இணைந்து ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன.
வீடுகள், கட்டடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி உள்ளிட்டோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!
அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது :
"சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம். ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்ஷன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான், சாம்பியன் பெண் ஆகியோருக்கு நன்றி. எங்கள் பிரார்த்தனைகள் வயநாடு மக்களுடன் உள்ளன"
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
Heartfelt thanks to Rajkumar Sethupa @hasinimani, @ManiRatnamFC, Sripriya, @khushsundar , Meena Saagar, G Square, @kalyanipriyan, Komalam Charuhasan, Lissy Lakshmi, Maijo George, @shobana_actor, Rahman, and Champion Woman for their generosity. Let oneness and hope prevail. pic.twitter.com/IUeAjaBcRP
— Kerala Government | കേരള സർക്കാർ (@iprdkerala) August 9, 2024