For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் - விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

03:47 PM Aug 07, 2024 IST | Web Editor
தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள்   விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்
Advertisement

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தின்  ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால்
ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

சென்னை கோட்டத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி..

  • ஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  • ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
  • ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ஆகஸ்ட் 14 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
Tags :
Advertisement