Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவன் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழப்பு!

தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவன் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
06:55 AM Aug 14, 2025 IST | Web Editor
தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவன் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நித்தீஷ் என்ற மாணவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி AI டிகிரி இரண்டாம் ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நித்தீஷ் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்து வகுப்புக்கு காலை 7.40 மணிக்கு சென்றுள்ளார்.

Advertisement

அப்பொழுது வகுப்பு நடக்கும் இடத்தில் அருகே இருந்த படிக்கட்டில் நடந்து சென்ற மாணவன் நித்தீஷ் படிக்கட்டில் இருந்து தவறி கிழே விழுந்ததில் சம்பவ இடத்திலே பலியாகி உள்ளார். இது சம்பந்தமாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் அடிப்படையில் மாணவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக குன்றத்தூர் போலீசார் மாணவர் உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகம்  ஹார்ட் அட்டாக் வந்ததால் மாணவன் இறந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள மாணவனின் உறவினர்கள் நித்தீஷின் உயிரிழப்பில் மர்மம் உள்ளது என்று அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடந்து வருகின்றனர்.

Tags :
latestNewsprivatecollegestudentdeathtamabaramTNnews
Advertisement
Next Article