For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு...! - பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு

06:23 AM Jan 03, 2024 IST | Jeni
பச்சரிசி  சர்க்கரை  முழு கரும்பு       பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு
Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 238 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள் : லாரி ஓட்டுனர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement