Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தைவான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

06:53 AM Apr 04, 2024 IST | Jeni
Advertisement

தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்தது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தைபேவின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். 1 மணி நேரத்திற்குள்ளாக 11 முறை நில-அதிர்வு உணரப்பட்டது.

தைவானில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தைவான் நாட்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவின.

இதையும் படியுங்கள் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7-ல் ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

இந்த நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மேலும் 5 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மேலும், சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Tags :
disasterearthquakeHualienTaiwan
Advertisement
Next Article