For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை போட்டி : ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி!

08:27 AM May 01, 2024 IST | Web Editor
டி20 உலகக் கோப்பை போட்டி   ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி
Advertisement

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரர்களை ஆஸ்திரேலிய அணி களமிறக்கியுள்ளது.

Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

நேற்று முன்தினம் முதல் அணியாக நியூசிலாந்து அணி தங்களது அணியை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது அணியை அறிவித்தது. இதேபோல பிசிசிஐ டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. அதன்படி கேப்டனாக ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட 15பேர் கொண்ட அணியை அறிவித்தது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களை அந்த அணி அறிவித்துள்ளது. அதன்படி மிட்ச் மார்ஸ் தலைமையிலான 15பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

மிட்ச் மார்ஸ் (கேப்டன்), அஸ்டன் அகார், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேஷல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லீஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேதிவ் வாடே, டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Tags :
Advertisement