For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக்கோப்பை: நேபாள அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி!

09:26 AM Jun 15, 2024 IST | Web Editor
டி20 உலகக்கோப்பை  நேபாள அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Advertisement

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில்  செயின்ட் வின்சென்ட் இன்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபாளம் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் டி காக் 10 ரன்னில் அவுட் ஆனார்.  இவரையடுத்து களமிறங்கிய மார்க்ரம் 15 ரன்னிலும்,  கிளாசென் 3 ரன்னிலும்,  மில்லர் 7 ரன்னிலும் வெளியேறினர்.  மறுமுனையில் நிலைத்து ஆடிய ஹென்றிக்ஸ் 43 ரன்னில் அவுட் ஆனார்.  இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.  நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் களம் இறங்கினர்.  இதில் குஷால் புர்டெல் 13 ரன்னிலும்,  அடுத்து வந்த ரோஹித் பவுடல் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர்.

இதையடுத்து ஆசிப் ஷேக் உடன் அனில் சா ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.  இதில் அனில் சா 27 ரன்னிலும்,  அடுத்து வந்த திபேந்திர சிங் ஐரி 6 ரன்னிலும்,  குஷால் மல்லா 1 ரன்னிலும் வெளியேறினர்.  மறுமுனையில் நிதானமாக ஆடிய வெளிப்படுத்திய ஆசிப் ஷேக் 42 ரன்னில் அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்களை மட்டுமே எடுத்தது.  இதன்மூலம்  தென் ஆப்பிரிக்கா அணி  1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இந்த தோல்வி மூலம் நேபாள அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

Tags :
Advertisement