டி20 உலகக்கோப்பை - அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு!
டி20 உலக கோப்பையின் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாள், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! - டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! - பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.