Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த லக்கி பெர்குசன்!

08:04 AM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வீசிய 4 ஓவர்களையும் மெய்டன் ஓவராக வீசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

20 அணிகள் பங்கேற்றும் விளையாடி வரும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த 2-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 போட்டிகளுக்கு இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதனையடுத்து நேற்று (ஜூன் 17) நள்ளிரவு நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில்,  நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும்.

அந்த வகையில் பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா அணி வீரர்கள் ஒரு ரன்கள் கூட எடுக்கவில்லை. வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியதுடன் 3 விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 20 ஒவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓவரையும் மெய்டனாக வீசியது இதுவே முதல் முறையாகும்.

Tags :
Lockie FergusonNZ vs PNGPNG vs NZT20 World Cup
Advertisement
Next Article