For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக்கோப்பை: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

05:18 PM Apr 30, 2024 IST | Web Editor
டி20 உலகக்கோப்பை  ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  இங்கிலாந்து அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

நேற்று முதல் அணியாக நியூசிலாந்து தனது 15 வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்தது.  இதில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி. மாற்று வீரர்: பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் வெளியிட்டுள்ள வீரர்களின் பட்டியல் :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி (துணை கேப்டன்), சாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், மார்க் வுட், ரீஸ் டாப்லி, அடில் ரஷித்,  டாம் ஹார்ட்லி,  பென் டக்கெட்.

Tags :
Advertisement