டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து அணி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் அயர்லாந்து அணி சேர்த்தது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாள், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 36-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘PHOENIX வீழான்’ படத்தின் டீசர் வெளியீடு!
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் அயர்லாந்து அணி குவித்தது. அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேரெத் டெலானி 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜோஷ்வா லிட்டில் 22 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷகின் அஃப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.