Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி-20 உலகக்கோப்பை- சூப்பர் 8: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

08:06 AM Jun 21, 2024 IST | Web Editor
Advertisement

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றது. 

Advertisement

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் நேற்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மோதியது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கத் திணறினர். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம், ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுடன் மோத வேண்டும். சூப்பர் சுற்றில் இன்னும் ஒரு போட்டியில் இந்தியா வெற்றிப் பெற வேண்டும். இதில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும்.

Tags :
#INDvsAFGafghanistanCricketIndiat20 worldcup
Advertisement
Next Article