அதனை தொடர்ந்து முன்கூட்டியே களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், விராட் கோலியுடன் கைகோத்து நிதானமாக ஆடினார். விராட் கோலி ஒருபக்கம் நிதானம் காட்ட மறுபக்கம் அக்சர் படேல் அதிரடியாக ஆடி இந்திய அணியை இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் 13.3 ஓவரில் 31 பந்துகளை சந்தித்து 47 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் கோலியுடன் இணைந்து ஆடினார். விராட் கோலி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் கோலி. அவர் 59 ரன்களில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதன்வாயிலாக, தென்னாப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.