டி20 உலகக் கோப்பை 2024: போட்டி அட்டவணை வெளியீடு!
உலகக் கோப்பை டி20 தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான அணிகளின் பட்டியலையும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதையடுத்து, இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை டி20 தொடரானது வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், நேபாள், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா உகாண்டா, கனடா என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
Mark your calendars 🗓️
Date and venue revealed for the highly-anticipated Men’s #T20WorldCup 2024 clash between India and Pakistan 👇
— ICC (@ICC) January 5, 2024
இந்த 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் நடைபெறும். ஜூன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் முதல் மற்றும் 2வது அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்படும். கடைசியாக ஜூன் 29-ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி டல்லாஸில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் 4 போட்டிகளும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.
இந்தியா விளையாடும் போட்டிகள்:
ஜூன் 5: இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்
ஜூன் 9: இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்
ஜூன் 12: இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்
ஜூன் 15: இந்தியா – கனடா – லாடர்ஹில் (ஃபுளோரிடா)
குரூப் ஏ:
இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
குரூப் பி:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் சி:
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,
குரூப் டி:
தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, நேபாளம்
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே இருக்கிறது.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரையில் நடைபெறும்.