Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியா இலங்கை இடையிலான டி20 தொடர் - கொழும்புவில் இன்று தொடக்கம்!

08:23 AM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா இலங்கை இடையிலான 3போட்டிகள் கொண்ட டி20 தொடர்  கொழும்புவில் இன்று தொடங்க உள்ளது.

Advertisement

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை (29.06.2024) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்த போட்டிகளுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.  இந்த டி20 தொடர்கள் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் ஜூலை 26ம் தேதி டி20 போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, முதல் டி20 தொடர் ஜுலை 27ம் தேதியும், 2வது டி20 தொடர் ஜுலை 28ம் தேதியும், 3வது டி20 தொடர் ஜுலை 30ம் தேதியும் நடைபெறுகிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆக.2,4,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  இந்த போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த போட்டியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல இலங்கை அணியும் புதிய கேப்டனான சரித் அசலங்கா தலைமையில் களம் இறங்க உள்ளது.  இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Tags :
ColomboIndiaSrilankasurya kumar yadavT20 Series
Advertisement
Next Article