For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20: இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

04:05 PM Jul 02, 2024 IST | Web Editor
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20  இந்திய அணியில் சாய் சுதர்சன்  ஜிதேஷ் சர்மா  ஹர்ஷித் ராணா சேர்ப்பு
Advertisement

இந்திய அணியில் சிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் ப்ராக் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரியான் பராக் 573 ரன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி-20  கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் சாய்சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் சிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 6-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளின் ப்ளேயிங் XI-ல்  சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை ஆடவர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் இந்திய அணியுடன் ஹராரேவுக்கு புறப்படுவதற்கு முன்பு இந்தியாவுக்குச் செல்ல இருக்கின்றனர் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்: ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, கலீல் அகமது, தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ஷித் ராணா.

ஜூலை 6-ம் தேதி முதல் போட்டியும், ஜூலை 7-ம் தேதி 2வது போட்டியும், 3வது போட்டி ஜூலை 10-ம் தேதியும், 4வது போட்டி ஜூலை 13-ம் தேதியும், 5வது போட்டி ஜூலை 14-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போட்ஸ் க்ளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement