For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 போட்டி | ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

09:49 PM Dec 01, 2024 IST | Web Editor
டி20 போட்டி   ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
Advertisement

ஜிம்பாப்வே அணி எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது . இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 165 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான் , தயப் தாஹிர் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.

இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி | சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . இதனால் 15.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் சிக்கந்தர் ராசா மட்டும் நிலைத்து ஆடி 39 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அபிரார் அகமது, சுபியான் முகீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
Advertisement