#Switzerland | 'தற்கொலை காப்ஸ்யூல்' மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்... போலீசார் அதிரடி!
64 வயதுடைய அமெரிக்க பெண் தற்கொலை காப்ஸ்யூலை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சர்கோ' என்ற தற்கொலைக் காப்ஸ்யூல் எளிதாக உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கண்டுப்பிடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், 64 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் இந்த காப்ஸ்யூலை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் அதாவது, சுவிட்சர்லாந்து - ஜெர்மனி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தற்கொலை காப்ஸ்யூலை பயன்படுத்தி ஒருவர் உயிரை மாயத்துக் கொண்டுள்ள சம்பவம் இதுவே முதல்முறை.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த காப்ஸ்யூலுக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் இறந்து விடுவார்கள். ஏனெனில், அந்த காப்ஸ்யூலின் உள்ளே நைட்ரஜன் வாயு வெளியாகும். நைட்ரஜன் வாயு விஷம் இல்லை என்றாலும், அது ஆக்ஸிஜனைக் குறைக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்துவிடுவர்.