ஸ்விக்கி டெலிவரி பாய் To பேஷன் மாடல்! #Mumbai-ஐ சேர்ந்தவரின் வெற்றி பயணம்!
மும்பையை சேர்ந்த சாஹில் சிங் என்பவர் ஸ்விக்கி டெலிவரி பாய் பணியில் இருந்து பேஷன் மாடலாக மாறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சாஹில் சிங் 2012ம் ஆண்டு தனது பள்ளியில் முதல் முறையாக பேஷன் ஷோவில் பங்கேற்றபோது மாடலிங் தொடர்பான தனது முதல் அனுபவம் என்று கூறுகிறார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, ஸ்விக்கி டெலிவரி பாயாக பணி புரிந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு வேலைகளை செய்தார். அதன் மூலம் மாதம் ரூ.18,000 முதல் 22,000 வரை சம்பாதிக்க செய்தார். இருந்தபோதிலும், அவருக்கு மாடலிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதற்காக தொடர்ந்து 5 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து சம்பாதித்தார்.
இதையும் படியுங்கள் :#SanFrancisco விமான நிலையத்தில் முதலமைச்சர் #MKStalin-ஐ நடனமாடி உற்சாக வரவேற்ற தமிழர்கள்!
அந்த 5 ஆண்டுகளில் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை தனது கனவுக்காக செலவு செய்தார். மொத்தமாக 200 ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளார். இறுதியாக இந்த ஆண்டு நிகழ்ந்த ஸ்ட்ரீக்ஸால் என்ற பேஷன் ஷோவில் தேர்வானார். இது தனது முதல் வெற்றி என சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.