காலி பாட்டிலை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனம்! - வைரலாகும் வாடிக்கையாளரின் பதிவு!
காலி பாட்டிலை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த வாடிக்கையாளரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோர் ஸ்டெப் டெலிவரி எனப்படும் வீடு தேடி வந்து பொருட்களை டெலிவரி செய்யும் தொழில் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனால், ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகின்றன.
முதலில் உணவுப் பொருட்கள் டெலிவரி என தொடங்கி, தற்போது மளிகை பொருட்கள்,
உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்கள் கூட ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வழங்கும் சேவையை இந்நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இது போன்ற வளர்ச்சிகள் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மை அளிக்கிறதோ, அதேபோல தவறுகளும் நிறைய ஏற்படுகிறது.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் – முதலிடத்தில் கோலி! அடுத்த இடங்களில் யார் தெரியுமா?
இந்நிலையில், அண்மையில் ஒருவர் ஸ்விக்கியில் எலும்பிச்சை சோடாவை ஆர்டர் செய்துள்ளார். அந்த நபர் ஆர்டர் செய்த சில நிமிடங்களில் ஸ்விக்கி ஊழியர் ஆர்டரை டெலிவரி செய்துள்ளார். பார்சலை பிரித்து பார்த்தில் எலும்பிச்சை சோடா இல்லாமல், வெறும் பாட்டில் இருந்ததை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அவர் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவின் கீழ், ஆர்டர் செய்த எலும்பிச்சை சோடாவிற்கு பதிலாக வெறும் பாட்டிலை அனுப்பியத்திற்கு மிக்க நன்றி என தெரிவித்திருந்தார். அந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thanks, Swiggy, for sending me a sealed empty glass. I hope my lime soda will come in another order. ❤️ pic.twitter.com/EsK9PBfYgy
— Aaraynsh (@aaraynsh) June 18, 2024