Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்!

09:53 PM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் ஐசிசி தனது தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் - 844 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் - 842 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும், இங்கிலாந்து அணியின் பிலிப் சால்ட் - 816 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும், பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் - 755 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும் மற்றும் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் - 746 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 255 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி 42 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 158 ஆகவும் இருக்கிறது. இந்த தொடரில் 149 ரன்கள் எடுத்துள்ள சூர்யகுமார் யாதவின் சராசரி 29.80 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 139.25 ஆகவும் உள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அணிகளை பொறுத்தவரை டி20 போட்டிகளில் இந்தியா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Tags :
AustraliaBumrahICC RankingsSuryakumarn yadavT20 battertravis
Advertisement
Next Article