உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவுயேற்கவுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர் கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் பதவி ஓய்வு பெற்றார்.
அதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தின் மரபின்படி அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி "சூர்ய காந்தை" நியமனம் செய்ய அவரது பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்திருந்தார். அந்த அடிப்படையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்கவுள்ளார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்கும் மூத்த நீதிபதி சூர்யகாந்த் கடந்த 2019 மே 24ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இவரின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி 9ம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது