For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பின்லாந்தில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, ஜோதிகா! வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோதிகா!

10:35 PM Jan 29, 2024 IST | Web Editor
பின்லாந்தில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா  ஜோதிகா  வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோதிகா
Advertisement

நடிகர் சூர்யா, ஜோதிகா ஜோடி பின்லாந்தில் புத்தாண்டை கொண்டாடிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி திரையுலக ஜோடியாக நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா திகழ்கின்றனர். இந்நிலையில் இருவரும் பிஸியாக நடித்து வருகின்றனர். ஜோதிகா சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடன் ஓரினச்சேர்க்கையாளர் கதையில் போல்டாக நடித்த மிரட்டி இருந்தார்.

ஜோ பேபி இயக்கத்தில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் ஜோதிகாவுக்கு பல புதிய படங்களின் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பியுள்ள ஜோதிகா அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் இணைந்து நடித்த சைத்தான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் அங்கிருந்து எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கங்குவா படத்தின் லுக்கில் சூர்யா இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் சூர்யா வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement